ஷோரூமில் காத்திருந்த தாய்.. டெஸ்ட் ரைட் சென்ற மகனுக்கு நேர்ந்த கொடூரம்!



Bike Test drive son death in Kerala

கேரளா மாநிலம் வரப்புழா கன்னத்த்தராவை சேர்ந்த நிதின் என்பவருக்கு பிறந்தநாள் பரிசாக புதிய பைக் வாங்க அதே பகுதியில் உள்ள பிரபல பைக் ஷோரூமுக்கு அவரது தாயார் அழைத்து சென்றுள்ளார். தனக்கு பிடித்த பைக்கை வாங்க ஷோரூம் சென்ற நிதின் தனது புதிய பைக்கை டெஸ்ட் ரைட்கு எடுத்துச் சென்றுள்ளார்.

KERALA

அப்போது நிதினின் அம்மா தனது மகனுக்காக பைக் ஷோரூமில் காத்திருந்தார். இதனையடுத்து நிதின் டெஸ்ட் ரைட் சென்று கொண்டிருந்தபோது வளைவில் வாகனத்தை திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பைக் மெட்ரோ கட்டுமான தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், 5 ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிதின் பலத்த காயமடைந்து சாலையில் பிறந்துள்ளார். அதன் பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

KERALA

இதனையடுத்து நிதினின் தயாரித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் நிதினுக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிகிச்சை பழம் இன்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிறந்தநாள் பரிசாக பைக் வாங்க சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.