கள்ளச்சாராய் விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பு.? ஆதாரங்களுடன் ஆளுநரை சந்தித்த அண்ணாமலை.!!



bjp-leader-annamalai-meets-tn-governor-rn-ravi-regardin

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 58 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் திமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அது தொடர்பான ஆவணங்களை ஆளுநரை சந்தித்து கொடுத்திருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

 

கடந்த சில தினங்களாக கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இதுவரை 58 பேர் மரணம் அடைந்த நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விச சாராய மரணங்களுக்கு காவல்துறையும் தமிழக அரசும் முக்கிய காரணம் என பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  விஷச்சாராய விற்பனையில் திமுக முக்கிய புள்ளிகளுக்கு தொடர் இருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார்.

tamilnaduமேலும் இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ள அண்ணாமலை கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தமிழக அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்யப்பட வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த தகவலை பதிவு செய்துள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழக பாஜகவின் முக்கிய தலைவரும் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் அண்ணாமலை உடன் இருந்தார்.

இதையும் படிங்க: வாவ்.!! அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.!! தினக்கூலி தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்.!!

கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் வருகின்ற 10ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய மரணங்கள் திமுக மற்றும் கூட்டணிக்கு கலங்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் பரிதாப பலி; நெல்லையில் சோகம்.. நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!