வைரல் வீடியோ: சுத்து போட்ட சிங்கங்கள்!! தனி ஆளாக சிங்கத்திடம் இருந்து குட்டியை காப்பாற்றிய தாய் எருமை!!



Brave mother buffalos save its cube viral video

எருமை ஒன்று சிங்க கூட்டத்திடம் இருந்து தனது குட்டியை காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது. தாய் எருமை மாடு ஒன்று தனது குட்டியுடன் சென்றுகொண்டிருக்க, அங்கு வந்த சிங்க கூட்டம் ஒன்று அந்த எருமை மற்றும் அதன் குட்டியை வேட்டையாட துடிக்கிறது.

அதில் ஒரு சிங்கம் எருமையின் குட்டியை கவ்விக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறது. இதனை பார்த்த தாய் எருமை, அந்த சிங்கத்தின் பின்னாலையே சென்று அந்த சிங்கத்திடம் இருந்து தனது கன்றுக்குட்டியை காப்பாற்றுகிறது. ஒரு தாயின் தைரியம் இதுதான் என சுசந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.