96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#ShockingNews: பிரேசில் இராணுவத்திற்கு 35,000 வயகரா மாத்திரைகள்.. எதற்காக தெரியுமா? அதிர்ச்சி தகவல்.!
35,000 வயகரா மாத்திரைகள், 60 செயற்கை ஆணுறுப்புகள் இராணுவ வீரர்களுக்கு வழங்கிய சர்ச்சையில் பிரேசில் இராணுவம் சிக்கியுள்ளது.
பிரேசில் நாட்டில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் இராணுவத் துறையில் மொத்தமாக 334,500 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 1,340,000 பேர் இருப்பு பணியாளர்களாக உள்ளனர். அமெரிக்க கண்டத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகமுக்கிய இராணுவ பலத்தை கொண்ட இராணுவமாக பிரேசில் இராணுவம் இருக்கிறது. இந்த நிலையில், பிரேசில் இராணுவத்தில் பணியாற்றும் நபர்களுக்கு 35,000 வயகரா மாத்திரைகள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், 60 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு செயற்கை ஆணுறுப்பு விறைப்புக்கான (Inflatable Penis Implants ) பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. வயகரா மாத்திரைகள் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள அந்நாட்டு இராணுவம், கல்லீரல் மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவே அவை கொடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.