மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே.. நாயை குளிப்பாட்ட சென்று பலியான அண்ணன், தங்கை.. கண்ணீரில் குடும்பத்தினர்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை டோம்பிவிலி பகுதியில் தாவடி ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று சகோதர, சகோதரிகளான 23 வயதுடைய ரவீந்திரன், 17 வயதுடைய கீர்த்தி ஆகியோர் தங்களின் வளர்ப்பு நாயை குளிக்கவைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கீர்த்தி கால்தவறி ஏரியில் விழுந்ததாக தெரிகிறது. இதனால் தங்கையை காப்பாற்றும் முயற்சியில் ரவீந்தரனும் ஏரியில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
பின் இதுதொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்து இருவரின் சடலத்தையும் மீட்டனர். நாயை குளிக்க வைக்கும் முயற்சியில் நீரில் மூழ்கி இருவரும் பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.