96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இறந்துபோய் அடக்கம் செய்யப்பட்ட முதியவர் உயிரோடு வந்த சம்பவம்!! கடும் பீதியில் கிராம மக்கள்..
இறந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட முதியவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் சிக்கமாலூரைச் சேர்ந்த நாகராஜப்பா. இவர் பெங்களூருவில் செய்விளையாராக பணியாற்றிவரும் தனது மகள் நேத்ராவின் வீட்டிற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் செண்டுள்ளார். மகள் வீட்டிற்கு சென்ற அவர், தினமும் குடித்துவிட்டு அந்த பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.
ஒருநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இந்நிலையில் நாகராஜப்பா போன்றே அடையாளம் கொண்ட சடலம் ஒன்று செண்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகே கிடந்துள்ளது. சடலத்தை பார்த்த நாகராஜப்பாவின் மகள், அது தனது தந்தையின் சடலம்தான் என கூறி, பிரேத பரிசோதனை செய்து, தந்தையின் உடலை அடக்கம் செய்துள்ளார். மேலும் நாகராஜப்பா இறந்ததற்கான இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நாகராஜப்பா மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் தனது சொந்த ஊரான சிக்கமாலூக்கு வந்துள்ளார். இறந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்ட நாகராஜப்பா உயிருடன் வருவதை பார்த்து அந்த கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதனை அடுத்து நாகராஜப்பாவை விசாரித்தபோது, போதையில் வழிதவறி எங்கோ சென்று கூலி வேலை செய்து வந்ததாகவும், தற்போது மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.