35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
வீடியோ போட என்னவெல்லாம் செய்றாங்க.! பிரபல யூடியூபர் மீது வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர்! பரபரப்பு சம்பவம்.!
கேரள மாநிலத்தில் வசித்து வருபவர் அமலா அனு. இவர் amala anu's vlogs என்ற youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் தான் ஷாப்பிங், சுற்றுலா தளங்களுக்கு, வனப் பகுதிகளுக்கு செல்லும் வீடியோக்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் அவர் அண்மையில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாம்பழத்தறையில் அடர்ந்த வனப் பகுதிக்குள் வனத்துறையினர் அனுமதியில்லாமல் சென்றுள்ளார்.
மேலும் அங்கு ஹெலிகேம் மூலம் வனப்பகுதியை மற்றும் வனவிலங்குகளை வீடியோ எடுத்துள்ளனர். மேலும் ஹெலிகேம் கண்டு காட்டு யானைகள் மிரண்டு ஓடியுள்ளது.
இந்த நிலையில் அனுமதியின்றி வனப்பகுதிக்கு சென்று வீடியோ எடுத்ததாகவும், வனவிலங்குகளை தொந்தரவு செய்ததாகவும் யூடியூபர் அமலா அனு மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.