#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிஞ்சா ரேஸ் பைக் மோதி காவலர் பரிதாப பலி; சென்னையில் சோகம்.!
சென்னையில் உள்ள தாம்பரம் - மதுரவாயல் சாலையில், இன்று காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அச்சமயம், அதே சாலையில் நிஞ்சா ரேஸ் பைக்கை ஒருவர் வேகமாக இயக்கி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர் குமார் என்பவர் ஈடுபட்டு இருந்த நிலையில், அவரின் மீது இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதியது.
இதையும் படிங்க: டூ-வீலர் மீது கார் மோதி பயங்கர விபத்து; தாய்-தந்தை, 2 குழந்தைகள் என குடும்பமே பலி.!
காவலர் பலி, வாகன ஓட்டி படுகாயம்
இந்த துயரத்தில் காவலர் குமார் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார். மேலும், அவரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞரும் படுகாயமடைந்தார். இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது காவலரின் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இருசக்கர வாகன ஓட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து போரூர் அருகே நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் வாகனம் அதிவேகத்தில் இயக்கப்பட்டது விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: லாரி மீது டூவீலர் மோதி பயங்கரம்; 17 வயது சிறுவன் பரிதாப பலி., காவல்துறையின் அறிவுரை ஏற்காததால் சோகம்.!