3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
குழந்தைகள் வாழ தகுதியான நாடுகள்! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலக சுகாதார நிறுவனம் யுனிசெப், லான்செட் மருத்துவ இதழ் ஆகியவை இணைந்து குழந்தைகள் வாழ தகுதியான நாடுகள் குறித்த பட்டியலை தயார் செய்தது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 40 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்று பட்டியலை தயார் செய்தனர்.
இந்நிலையில் 180 நாடுகளை அடிப்படையாகக் கொண்ட இப்பட்டியல் குழந்தைகளின் உடல்நலம், ஊட்டச்சத்து அவர்களது கல்வி உள்ளிட்ட நல வாழ்வு முறையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டது.
இப்பட்டியலில் முதலிடத்தில் நார்வே இரண்டாம் இடத்தில் தென்கொரியா மற்றும் மூன்றாம் இடத்தில் நெதர்லாந்து நாடுகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து அயர்லாந்து ஐந்தாவது இடத்தையும் டென்மார்க் ஆறாவது இடத்தையும் ஜப்பான் ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் எட்டாவது இடத்தில் பெல்ஜியம், ஒன்பதாவது இடத்தில் ஐஸ்லாந்து மற்றும் பத்தாவது இடத்தில் பிரித்தானியா நாடுகள் உள்ளன.
மேலும் குழந்தைகள் வாழ தகுதியான நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா 131 வது இடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை பின்தள்ளி இலங்கை 68 ஆவது இடத்தில் உள்ளது.