3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
"காசு வாங்குனேல கூட்டிட்டு வா.." புரோக்கரிடம் வக்கீல் ஆபாச பேச்சு.!! இளம் பெண் பரபரப்பு புகார்.!!
சேலத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தது தொடர்பாக வக்கீல் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இடைத்தரகர் வேலை செய்து வந்த கனிமொழி
சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி. இவர் வட்டிக்கு பணம் வாங்கி கொடுக்கும் இடைத்தரகராக வேலை செய்து வருகிறார். பல பைனான்சியர்கள் மூலம் பெண்களுக்கு கடன் வாங்கி கொடுத்திருக்கிறார். இதேபோல் கண்ணன் பிரபு என்ற வக்கீலிடம் தனக்கு 30,000 ரூபாய் கடன் வாங்கியதோடு 15 பெண்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கிக் கொடுத்ததாக தெரிகிறது.
அவதூறாக பேசிய வக்கீல்
இந்நிலையில் கனிமொழிக்கு அடிக்கடி போன் செய்த வக்கீல் கண்ணன் பிரபு, தன்னிடம் கடன் வாங்கிய பெண்களை தனக்கு கூட்டி கொடுக்குமாறு ஆபாசமாக பேசி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிப்பேன் என கனிமொழி தெரிவித்த போது காவலர்களை எவ்வாறு டீல் செய்வது என்று எனக்குத் தெரியும் அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை என தெனாவட்டாக தெரிவித்திருக்கிறார். மேலும் வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக கனிமொழியை சிக்க வைப்பேன் எனவும் மிரட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: மதுரை: மனைவிக்கு வளைகாப்பு நடத்திவிட்டு கணவர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்.!
காவல்துறையில் புகார்
மேலும் தினமும் 82 முறைக்கு மேல் ஃபோன் செய்து உளவியல் ரீதியாகவும் கனிமொழியை சித்திரவதை செய்திருக்கிறார் வக்கீல் கண்ணன் பிரபு. இதனைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ள கனிமொழி இந்தப் பிரச்சனை குறித்து முதலமைச்சருக்கு புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பத்திரிக்கையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: நடைபாதையில் அமர்ந்தவரை விரட்டித்தள்ளிய மாடு; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!