3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
அழகான பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்க சென்ற கல்லூரி மாணவர்.. அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி..! ஜாலிக்கு பிளான் செய்த இளைஞருக்கு நடந்த ஜோலி..!!
அழகான பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டுமென்று சென்ற கல்லூரி மாணவரிடம் ரூ.7,84,000 பணம் பறித்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் உடையாம்பாளையத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "நான் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறேன். எனக்கு நீண்ட காலமாக அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. எனது நண்பர் ஒருவர் இணையதளத்தில் தேடினால் அழகாக பெண்கள் கிடைப்பார்கள் என்று கூறியதால், இணையதளத்திற்கு சென்று உல்லாசமாக இருக்க அழகான பெண்கள் எங்கு கிடைப்பார்கள்? என்று தேடிபார்த்தேன்.
அப்போது சில அழகான பெண்களின் கவர்ச்சிபடத்துடன் ரூ20,000 பணம் கொடுத்தால், முழு இரவு அழகான இளம்பெண்ணுடன் நட்சத்திர ஹோட்டலில் ஜாலியாக இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதில் பேசிய நபர் என்னிடம் குமார் என்று அவரை அறிமுகம் செய்துகொண்டு, உல்லாசமாக இருக்க பீளைமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அழகான பெண்கள் இருப்பதாக கூறினார். பின் சில பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார்.
அப்பொழுது எனக்கு பிடித்த பெண்ணை நான் தேர்வு செய்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். இதனையடுத்து அந்த பெண் உங்களுக்கு வேண்டுமென்றால் முன்பனமாக உடனடியாக 2500 அனுப்பும்படி கூறினார். நானும் ஜாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை அனுப்பினேன். பின் பீளமேட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகவரி கூறினார். அங்குள்ள அறையில் தான் இளம்பெண் இருப்பதாக கூறியதால், நான் அங்கு சென்று அவரை தொடர்பு கொண்டேன்.
பெண் இருக்கும் அறை எண்ணை கொடுக்கும்படி கேட்டேன். அதற்கு அவர் அந்த பெண்ணின் பாதுகாப்பு, என்னுடைய பாதுகாப்பு. அறைக்கும் பணம் கொடுக்க வேண்டும். அந்த பெண்ணுக்கும் பணம் கொடுக்க வேண்டும். போலீசுக்கும் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி என்னிடம் தொடர்ச்சியாக பணத்தை அனுப்ப கூறினார்.
இதுவரையிலும் அவர் என்னிடம் இருந்து ரூ.7,84,000 பணத்தை பெற்று என்னை ஏமாற்றிவிட்டார். அதன் பின்னர் அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே ஆசைவார்த்தை கூறி, என்னை ஏமாற்றி மோசடி செய்த நபரை கைது செய்து பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று புகார் அளித்திருந்தார். இந்த புகார் பேரில் வழக்குபதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.