குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பட்டப் பகலில் பயங்கரம்... இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து மாணவி படுகொலை.!
இந்திய தலைநகர் டெல்லியில் மாணவி பட்டப் பகலில் கல்லூரி வளாகத்தில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் தீவிரமாக கொலையாளியை தேடி வருகின்றனர்.
டெல்லியின் கமலா நேரு கல்லூரியைச் சேர்ந்த 25 வயது மாணவி ஸ்ரீ அரபிந்து கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பியும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
பட்டப் பகலில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தெற்கு டெல்லி டிசிபி மற்றும் உயர் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.