பரபரப்பு... புதிய சட்டங்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய காங்கிரஸ்.!! வழக்கறிஞர்கள் போராட்டம்.!!



congress-sends-notice-to-discuss-new-criminal-law

2023 ஆம் வருடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிலையில் அந்த சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டங்கள்

1860 ஆம் வருட இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் 1972 ஆம் வருடம் இயற்றப்பட்ட இந்திய சாட்சிய சட்டங்கள் ஆகியவற்றுக்கு பதிலாக கடந்த 2023 ஆம் வருடம் பாரதிய நியாய சன்கிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றும் பாரதிய  சாக்ஷியா ஆகிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் 2 அவைகளின் ஒப்புதலுடன் நிறைவேறியது.

New Criminal Law

ஜூலை 1 முதல் அமல்

புதிய குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்.. பாஜகவுக்கு அதிர்ச்சி.!

காங்கிரஸ் நோட்டீஸ்

இன்று முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி ஆளும் பாரதிய ஜனதா கூட்டணி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று முதல் போராட்டத்தை அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடிமேல் அடி.. காங்கிரசுக்கு இந்த மாநிலத்தில் வெற்றிவாய்ப்பே இல்லையாம் - கருத்து கணிப்பில் அதிர்ச்சி தகவல்.!