ஆட்டோவிற்குப் பின் எழுதப்பட்ட வாசகத்தால் சர்ச்சை... மொழி வெறி தூண்டப்படுகிறதா.? ட்விட்டரில் காரசார விவாதம்.!



controversy-over-the-words-written-after-auto-language

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இயங்கி  வரும் ஆட்டோ ஒன்றில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும் இது பல்வேறு விதமான விவாதங்களையும் ஏற்படுத்தி சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர்  இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படுகிறது. உலகின் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் இங்கு தான் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

Indiaஇங்கு இயங்கி வரும் ஆட்டோ ஒன்றின் பின்புறம் "நீங்கள் கர்நாடகாவில் வாழ்கிறீர்கள், நீங்கள்தான் கன்னடத்தை கற்றுக் கொள்ள வேண்டும், உங்கள் திமிரை இங்கே காட்டாதீர்கள், இங்கு நீங்கள் பிச்சை எடுக்க வந்திருக்கிறீர்கள்" என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.

இதனை ட்விட்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கும் ஒருவர் நாங்கள் யாரும் வட மாநிலங்களில் சென்று எங்கள் தாய் மொழியில் தான் பேச வேண்டும் என  யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் நீங்கள் இதை எங்கள் மாநிலங்களில் செய்கின்றீர்கள் என பதிவு செய்திருக்கிறார், இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.