96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கொரோனாவால் உயிரிழந்த இரண்டு நபர்கள்.! 15 மாதங்களாக பிணவறையில் இருந்ததை மறந்த மருத்துவமனை நிர்வாகம்.!
உலகத்தையே அச்சுறுத்திய கொரோனாவால் உலகின் பல நாடுகளில் பலர் பலியாகினர். கொரோனா தொற்றின் முதல் அலையில் இந்தியாவில் பலர் உயிரிழந்தனர். இந்தநிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட் பகுதியை சேர்ந்த துர்கா சுமித்ரா மற்றும் முனிராஜ் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் இருவரும் பெங்களூரு நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து இருவரின் உடல் மருத்துவமனையில் இருந்த பிணவறையில் வைக்கப்பட்டது. ஆனால், இரண்டு உடல்களையும் வைக்கப்பட்டதையே மருத்துவமனை நிர்வாகம் மறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுகாதாரத்துறையே இருவரின் உடல்களையும் தகனம் செய்ததாக அவர்களது உறவினர்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், சமீபத்தில் மருத்துவமனையின் பிணவறையை சுத்தம் செய்தபோது அங்கிருந்த குளிர்பதன பெட்டியில் புழுக்கள் மொய்த்த நிலையில் இரண்டு சடலங்கள் கிடந்துள்ளன. அந்த இரண்டு உடல்களும் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்த துர்கா சுமித்ரா மற்றும் முனிராஜூன் உடல்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அவர்களது உறவினர்களுக்கு தெரியவந்தநிலையில், மருத்துவமனையின் அலட்சியப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்து இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.