ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த நோயாளி! சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயதான கொரோனா நோயாளி ஒருவர் திடீரென மருத்துவமனையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். அவர் காணாமல் போனதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர்.
இந்தநிலையில் அந்த முதியவர் காணாமல் போன 24 மணி நேரத்துக்குப் பிறகு மருத்துவமனையின் அருகே சற்று தொலைவில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே இதற்கு காரணம என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து உயிரிழந்த அந்த நபரின் மகள் பேசுகையில், மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் முற்றிலும் அதனை மறுத்துள்ளது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன் என தெரிவித்தார்.