கண்கலங்கவைக்கும் கொரோனா மரணம்.. இந்த ஆண்டில் முதன்முறையாக ஒரே நாளில் இத்தனை பேர் கொரோனாவுக்கு பலி..!



Corona virus latest count and update in India

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போதுவரை இந்தியா உள்ளிட்ட பெரிய நாடுகளில் தொடர்ந்து பரவிவருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 62,500 ஐ தாண்டியுள்ளது. அதவாது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதிக்கு பிறகு இதுவே அதிகபட்ச தொற்று எண்ணிக்கை ஆகும். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 312 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தற்போது கொரோனா பாதித்து சுமார் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.