96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என் அம்மாவை காப்பாத்துங்க! கண்கலங்கியபடி இளம்பெண் வெளியிட்ட டிக்டாக் வீடியோ! பின் நேர்ந்த ஆச்சர்யம்!
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் பவித்ரா ஆரபவி. 18 வயது நிறைந்த இவரது தாய்க்கு சிறுநீரகங்கள் செயலிழந்து அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் டயாலிசிஸ் செய்யவேண்டுமென கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அவர் நாள்தோறும் நான்கு விதமான மாத்திரகளைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் உயிர் வாழ்வது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கொரோனோவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளநிலையில் , அவருக்கு தேவையான மாத்திரைகள் வாங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வேறுவழியின்றி இதுகுறித்து பவித்ரா டிக்டாக்கில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவியும் கோரியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் எடியூரப்பாவின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அதனை தொடர்ந்து அடுத்த நாளே, அதிகாரிகள் பவித்ராவின் வீட்டிற்குச் சென்று அவரது தாயாருக்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண் நெகிழ்ந்து அனைவருக்கும் மனதார நன்றி கூறியுள்ளார்.