96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இறுதிச் சடங்கிற்கு தயாராக இருந்த சடலம்... கண்விழித்ததால் அலறிய உறவினர்கள்... மருத்துவர் பரிசோதனை.!
மத்திய பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் இறந்ததாக நினைத்து அவருக்காக இறுதிச் சடங்கு செய்வதற்கு உறவினர்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் திடீரென கண் விழித்த சம்பவம் குடும்பத்தினர் இடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் மொரோனா பகுதியைச் சார்ந்தவர் ஜிது பிரஜாபதி. கடந்த 30 ஆம் தேதி அன்று திடீரென மயங்கி விழுந்த இவர் நீண்ட நேரமாகியும் கண் விழிக்காததால் இறந்து விட்டதாக கருதிய உறவினர்கள் இவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.
உறவினர்கள் அனைவரும் இவருக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோது திடீரென அவர் கண்விழித்து பார்த்திருக்கிறார். இதனைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். மேலும் உடனடியாக மருத்துவதற்கு தகவல் கொடுத்தனர். மாலையும் கழுத்துமாக இருந்தவரை வந்து பரிசோதித்துப் பார்த்தார் மருத்துவர் .
அந்த நபரை பரிசோதித்து பார்த்து விட்டு உயிருடன் தான் இருக்கிறார் என மருத்துவர் தெரிவித்துள்ளார் . இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக குவாலியர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .