மெட்ரோ ரயிலில் எல்லை மீறிய காதல் ஜோடி; சர்ச்சை வீடியோ வைரல்.!



Delhi Metro Couple Lip lock kiss video trending

இந்தியாவின் தலைநகரான டெல்லியில், நகரின் போக்குவரத்து சேவையை மக்களுக்கு எளிதில் அணுகும் வகையில் மெட்ரோ இரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் பயணிகளில், சில ஜோடிகள் ஒருசில நேரம் எல்லை மீறிய செயலில் ஈடுபடும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் மாதம் 2 முதல் 3 சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடைபெற்று, அதன் வீடியோ அதிர்ச்சி தரும் வகையில் வெளியாகி வைரலாகி வந்தது. இதனிடையே, தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

எல்லை மீறிய காதல் ஜோடி

மெட்ரோ இரயிலில் பயணம் செய்த இளம் காதல் ஜோடி, பொதுமக்கள் முன்னிலையில் இருக்கையில் அமர்ந்தவாறு பேசிக்கொண்டு வந்தது. ஒருகட்டத்தில் இருவரும் தங்களின் அன்புக்கு அடையாளமாக உதட்டோடு-உதடு வைத்து முத்தம் பரிமாறிக்கொண்டது. 

இதையும் படிங்க: ஆம்புலன்சுக்கு வழிவிட மறுத்த காருக்கு ரூ.2.5 இலட்சம் அபராதம் விதிப்பு; வீடியோ வெளியானதால் காவல்துறை அதிரடி.!

இரயிலில் குழந்தைகள் முதல் அனைவரும் பயணம் செய்யும் நிலையில், காதல் ஜோடிகள் எல்லை மீறிய உணர்ச்சி இன்பத்தில், அவர்களின் தனிமை செயலை பொதுவெளிகளில் அரங்கேற்றி வருகிறது. இவ்வாறான சில விஷயங்கள் பொதுமக்களை முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: காதலியை கால் கேர்ள் ஆக்கி வருமானம் பார்த்த இளைஞர்; டேட்டிங் ஆப்-பில் கஸ்டமர்ஸ்.. பகீர் தகவல்.!