இது என்னடா புது கூத்தா இருக்கு... திருமண நிகழ்வில் மாமியாரே மருமகனுக்கு சிகரெட் கொடுத்த சம்பவம்... வைரல் வீடியோ!!



Different wedding ceremony video viral

பொதுவாக வட மாநில திருமணங்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என ஒரு வாரத்திற்கு விழா களைக்கட்டும். சில திருமணங்களில் வித்தியாசமான மற்றும் புதுவிதமான நிகழ்வுகளும் இடம்பெறும். அதே போல் ஒரு புது விதமான நிகழ்வு நடைப்பெற்ற திருமண விழா இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறித்த திருமண நிகழ்வில் மருமகனுக்கு மாமியார் சிகரெட் கொடுக்கும் நிகழ்வு நடைப்பெற்றுள்ளது. மணமகனின் மாமனார் மாமியார் கையில் சிகரெட்டை கொடுக்க அதனை மாமியார் மருமகன் வாயில் வைக்கிறார். அதனை மாமனார் தனது கையால் பற்ற வைக்கும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பொதுவாக தனக்கு மருமகனாக வரும் நபர் எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்க வேண்டும் நினைப்பவர்கள் மத்தியில் இப்படி மாமியாரே மருமகனுக்கு சிகரெட் கொடுத்த நிகழ்வு நடந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்னடா புது கூத்தா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.