கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
அடிச்சு தூக்கிய சூறைக்காற்று; அரசு பேருந்தின் டாப்பை பிடுங்கிய அசுரக்காற்று.. அலறிய பயணிகள்.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை நேரம் முதலாக பலத்த சூறாவளிக்காற்று வீசியது. மத்திய வேலைகளிலும் காற்றின் வேகம் குறையவில்லை.
திடீரென வீசிய சூறைக்காற்று காரணமாக, பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. நகர்ப்பகுதியில் மரம் விழுந்ததில் தள்ளுவண்டிக்கடை வைத்து நடத்தி வந்த காளியம்மாள் என்ற பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
பலத்த சூறைக்காற்று
தட்டான்குளம் பகுதியில் கணேசன் என்பவரின் வீட்டின் மேற்கூரை பறந்தது. 15 இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இந்நிலையில், கீரனுர் பகுதியில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது.
இதையும் படிங்க: லாரி மீது டூவீலர் மோதி பயங்கரம்; 17 வயது சிறுவன் பரிதாப பலி., காவல்துறையின் அறிவுரை ஏற்காததால் சோகம்.!
இப்பேருந்து அங்குள்ள நரிக்கல்பட்டி பகுதியில் சென்றபோது, சூறாவளி காற்று காரணமாக பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து தொங்கியது. இதனால் பதறிப்போன பயணிகள் அலறிய நிலையில், பேருந்தை ஓட்டுனரும் விரைந்து நிறுத்தினார்.
பின் மாற்று பேருந்து உதவியுடன் பயணிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: யாசகம் பெறுவதுபோல நடித்து செல்போன் திருட்டு; மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சி சம்பவம்.!