96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சுங்கச்சாவடியில் பெண் ஊழியரிடம் அத்துமீறிய வாலிபர்.! கொஞ்சமும் தயங்காமல் இளம்பெண் செய்த காரியத்தை பார்த்தீர்களா !!
குர்கான் கெர்கி தவுலா பகுதியிலுள்ள சுங்க சாவடிக்கு நபர் ஒருவர் காரில் வந்துள்ளார் .அப்பொழுது அவர் சுங்கவரி செலுத்துவதற்கு பதிலாக அடையாள அட்டை ஒன்றை சுங்கச்சாவடியில் பணிபுரிந்த பெண் ஊழியரிடம் காண்பித்துள்ளார்.ஆனால் அந்த பெண் இந்த அடையாள அட்டை செல்லாது சுங்க வரியை செலுத்தி விட்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அந்த கார் ஓட்டுனர் பெண் ஊழியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் சற்றும் தாமதிக்காமல் மீண்டும் திருப்பி அந்த நபரை அறைந்துள்ளார்.
ஆனாலும் வெளியில் இருந்த அந்த நபர் தொடர்ந்து அப்பெண்ணை தாக்கிய நிலையில், அப்பெண் வெளியே சென்று அந்த நபரை தாக்கி பெரும் களேபரமாகியுள்ளது. அதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற சண்டையை நிறுத்தினர்.
இந்த நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்துள்ளனர்.