குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
யூடியூபில் வீடியோ பார்க்கும்போது இந்த லிங்க்-ஐ கிளிக் செய்கிறீர்களா?.. அக்கவுண்டில் உள்ள மொத்த பணமும் குளோஸ்..! உஷாரா இருங்க..!!
சைபர் மோசடி தொடர்பான குற்றங்கள் பல வகைகளில் இன்றளவில் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், ஒரு சில நேரங்களில் அறியாமை காரணமாகவும், அலட்சியம் காரணமாகவும், சைபர் கிரைம் மோசடிகளுக்கு நாமும் உள்ளாகிவிடுகிறோம்.
Youtube வீடியோ பார்த்தால் உங்களது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படும் என்று சொன்னால் நம்புவீர்களா? தற்போது அப்படிதான் நடந்துகொண்டிருக்கிறது. யூடியூபில் ஆடைகள் ஆஃபர் முதல் இலவச சாஃப்ட்வேர் வரை அனைத்தையும் தேடுகிறோம்.
அப்படி ஏதாவது தேடும்போது அதில் கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு சில வீடியோக்களில் கூறுவர். அதனை நம்பி கிளிக் செய்தால் உங்கள் பணம் அவ்வளவுதான். சில லிங்க்-களை கிளிக் செய்வதால் நமது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்பட்டு பணம் மொத்தமும் இழக்கும் அபாயம் உள்ளது.
ஆகையால் இனி வரும் காலங்களில் யூடியூபில் வீடியோ பார்க்கும் போது ஏதேனும் லிங்க் இருந்தால் அதனை கிளிக் செய்து மேற்படி தெரிந்துகொள்ளுங்கள் என்றால் சற்று கவனமாக இருங்கள். சைபர் கிரிமினல்கள் இந்த புது யுக்தியில் சிக்கிகொள்ளாதீர்கள்.