96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பல லட்சகணக்கான ரசிகர்களை கொண்ட பிரபல டிக்டாக் நட்சத்திரம் தற்கொலை! சோகத்திலும், அதிர்ச்சியிலும் ரசிகர்கள்!
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு ஏற்படுத்திய சோகத்திலிருந்து இன்னும் பாலிவுட் ரசிகர்கள் மீளவில்லை. தற்போதும் அவரைப் பற்றி தான் சமூக வலைத் தளங்களில் அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மற்றொரு பிரபலத்தின் தற்கொலை பற்றிய செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது நடனத்தின் மூலம் டிக்டாக் பிரபலமானவர் டெல்லியைச் சேர்ந்த சியா கக்கர். இவரை டிக்டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான
16 வயதே ஆன சியா கக்காரின் வீடியோக்கள் வைரல் ஹிட் அடிக்கக் கூடியது.
இவர் அனைத்துத் தளங்களிலும் இயங்கி வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சமூக வலைதளத்தில் சியாவைப் பின்தொடர்ந்து வரும் பல ரசிகர்கள் அவரது தற்கொலை குறித்து அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.