குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த மாமனார்.! கர்ப்பமான மருமகள்.! வெளிச்சத்திற்கு வந்த பகிர் தகவல்
வேலூர் மாவட்டம் பொண்னை பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவரது கணவர் சதிஷ் குமார். இவர்களுக்கு திருமணம் நடந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த பெண் காவல் நிலையத்தில் தனது மாமனார் மீது புகார் கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த புகாரில், கடந்த 2018ஆம் ஆண்டு 16 வயதான எனக்கும் சித்தூர் மாவட்டம் ராமாபுரத்தைச் சேர்ந்த ராமுலு என்பவரது மகன் சதிஷ்குமாருக்கும் கட்டாய திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு எனது மாமனார் மட்டும் எங்கள் வீட்டிற்கு வந்து என் தாயிடம், தனக்கு சொத்துக்கள் உள்ளது. இதற்கு ஒரே வாரிசு என் மகன்தான். எனவே உங்கள் மகளை எனது மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று ஆசை வார்த்தை கூறினார்.
திருமணம் நடக்கும் வரை எனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது எனக்கு தெரியாது. வீட்டுக்கு ஒரே மகன் சொத்து அதிகமாகவே இருக்கிறது என்று ஆசை வார்த்தை கூறியதால் எனது தாயாரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு திருமணம் செய்துவைத்துள்ளார். இந்நிலையில் எனது மாமனார் ஒருநாள் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதை வெளியே சொன்னால் தனது தாயை கொலை செய்துவிடுவதாக மிரட்டி, இதேபோல் தொடர்ந்து என்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன். இந்தநிலையில், எனக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது என்னை அடித்து துன்புறுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.