ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி... மருத்துவமனையில் தீ விபத்து... மாற்றப்பட்ட நோயாளிகள்... தீவிர விசாரணை.!
குஜராத்தின் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தீயணைப்பு வீரர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் ராஜஸ்தான் ஹாஸ்பிடல் என்ற பத்து மாடிகளை கொண்ட மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4:30 மணிக்கு தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
20 இருக்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மேலும் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 126 நோயாளிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது .
அந்த மருத்துவமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அடித்தளத்தில் வைக்கப்பட்ட பொருளிலிருந்து தீ பற்றி இருக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த மருத்துவமனை ஒரு தொண்டு நிறுவனத்தால் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.