3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
75 லட்சம் ஏழை மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு.!
புதியதாக 75 லட்சம் ஏழை மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று வருடங்களில் இலவச கேஸ் கனெக்சன் வழங்க மற்றும் இந்தத் திட்டத்திற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜி20 மாநாடு மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரான அனுராக் தாகூர் சந்தித்து ஜி 20 மாநாட்டிற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதாகவும், டெல்லி பிரகடனம் எனும் உக்ரைன் குறித்த கூட்டறிக்கை இந்திய தேசத்தின் பலத்தை நிரூபிக்கிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பிரதமரின் உஜ்வாலா யோஜனா எனும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தேவையான இலவச கேஸ் சிலிண்டர் கனெக்சன் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் கேஸ் இணைப்பு வழங்குவதற்காக ரூ.1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.