96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி..! நண்பனின் பிறந்தநாளை இறந்தநாளக்கிய பயங்கரம்.. ஒரே அடி.. நடந்தது என்ன?..!
தோழனின் பிறந்தநாளை சிறப்பிப்பதாக எண்ணி, நண்பனை அடித்து கொலை செய்த பர்த் டே - டெத் டே சம்பவம் நடந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் வரை பிறந்தநாட்கள் என்றால், வீட்டில் எடுக்கப்பட்ட புத்தாடையை உடுத்தி, மூத்தோர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆசி பெற்று, கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு பலகாரங்களை அக்கம், பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்ந்து வந்தோம்.
நமது தந்தை, தாய், அவர்களின் தந்தை, தாய் காலங்களில் இந்நடைமுறை பெரிதளவு இல்லாத நிலையில், இன்றளவு அது தவிர்க்க முடியாத நாளாக மாறிவிட்டது. காலத்தின் மாற்றத்தால் பிறந்தநாள் என்ற பண்டிகையை நாம் பல்வேறு வழிகளில் சிறப்பித்து வருகிறோம். ஆனால், இன்றோ அந்த பிறந்தநாள் பலருக்கும் இறந்தநாளாக நண்பர்களால் மாற்றப்படுகிறது.
இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், நண்பருக்கு பிறந்தநாள் தினத்தன்று நள்ளிரவு நேரத்தில் நண்பர்கள் அனைவரும் சாலையில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். இதன்போது, கலர் தாள் கைவெடி பட்டாசையும் வெடித்து, நண்பன் கேக்கை வெட்டியதும், அதில் நண்பனின் முகத்தை பிடித்து அழுத்துகின்றனர்.
பின்னர், கைகளில் வைத்திருந்த காகிதத்தால் கைவெடி பட்டாசு உருளையை வைத்து நண்பனின் மண்டையில் தாக்கி, அவனை அலேக்காக தூக்கி அனைவரும் அடித்து உதைக்கின்றனர். தலையில் அடித்தது, கேக்கில் முகம் பதித்தது என ஏற்கனவே திணறிப்போயிருந்த அந்த நண்பர், ஒரு சமயத்தில் மயங்கி விழுந்துவிடுகிறார்.
முதலில் நடிக்கிறான் என்று நண்பர்கள் எண்ணியிருந்த நிலையில், அவரது முகத்தில் தண்ணீர் அடித்தும் எழும்பாத காரணத்தால், அவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், அந்த நண்பரோ தனது பிறந்தநாளன்றே இறந்துவிடுகிறார். பிறந்தநாள் கொண்டாடுவதில் தவறில்லை. அதனை எப்படி கொண்டாடுகிறோம் என்பதே இங்கு பெரும் பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.
நண்பனின் பிறந்தநாள் அவனது வாழ்நாளில் மறக்க முடியாத அளவு இருக்க வேண்டும் என்றால் ஊருக்கே சமைத்து விருந்து போடலாம். அல்லது சாலையோரமாக இருக்கும் நால்வருக்கு ஒருவேளை பசியாற்றினால், அவர்கள் வயிறார வாழ்த்துவார்கள். எதுவும் இல்லையென்றால் அனைவரும் ஒன்றாக படுத்து உறங்கலாம். அதனைவிடுத்து, காலத்தின் மாற்றம் என பிறந்தநாளில் செல்லத்தனமான வன்முறையை கையில் எடுத்தால், அது விபரீதத்தில் சென்று சேரும் என்பதற்கு பல சம்பவங்களுடன் இந்த வீடியோ சம்பவமும் உறுதியாக அமைந்துள்ளது.