ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்காதலனின் மனைவி கூறிய அந்த வார்த்தை.! ஆத்திரத்தில் பக்காவா திட்டம்தீட்டி பெண் செய்த கொடூரம்!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள யசோதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் புரங்கி வர்மா. இவருக்கு 24 வயது பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் அந்த தம்பதியினருக்கு இரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் புரங்கி வர்மாவிற்கு ஜியா என்ற பெண்ணுடன் தகாத தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர் தனது மனைவியுடன் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதை தெரிந்துகொண்ட அந்த பெண் ஜியாவை நேரில் பார்த்து அவருடன் சண்டை போட்டுள்ளார். மேலும் அப்பொழுது அவர், நான் உன்னை விட ரொம்பவே அழகா இருக்கேன். அவர் எப்படிதான் உன்னை காதலிக்கிறாரோ என கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த ஜியா தனது தோழி ஒருவருடன் சேர்ந்து புரங்கி வர்மா மனைவியின் முகத்தில் ஆசிட் அடிக்க திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து புதிய செல்போன் நம்பரிலிருந்து அவருக்கு போன் செய்து, உங்கள் கணவர் குறித்த பல ரகசியங்கள் எனக்கு தெரியும் என கூறி தனியாக வரவழைத்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் தனது 2 வயது மகனையும் தூக்கிக்கொண்டு அவர் வரக்கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.
#Maharashtra: Woman, child injured in an acid attack by husband's ex-lover in Nagpur #Nagpur #NagpurShocker #AcidAttack #MaharashtraNews #OnCamera pic.twitter.com/UkZL092ZZZ
— Free Press Journal (@fpjindia) December 6, 2022
இந்த நிலையில் புர்கா அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஜியா, அவர்களை மறித்து ஆசிட் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் வலியால் துடிதுடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலி ஜியாவை கைது செய்துள்ளனர்.