96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தனியாக சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய கிராம பணியாளர்.. அரசியல் செல்வாக்கால் தலைமறைவு!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான திருமணமான இளம் பெண் ஒருவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தனது கடையை பூட்டிவிட்டு அங்குள்ள ஏரிக்கரை வழியாக தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது கிராம செயலக ஒருங்கிணைப்பாளராக உள்ள நடராஜ் என்பவர் அந்தப் பெண்ணை மறித்து பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட, அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்த நடராஜ் உடனடியாக தப்பி சென்று விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கு காரணம் நடராஜ் ஆளும் உயர் சார் காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்பதும், அமைச்சர் உஷா ஸ்ரீ சரணின் நெருங்கிய ஆதரவாளர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே நட்ராஜ் அந்த இளம் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள நடராஜ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தேடி வருகின்றனர்.