குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அடக்கொடுமையே! இதெல்லாம் ஒரு காரணமா? திருமண மண்டபத்திலிருந்து ஓட்டம்பிடித்த மாப்பிள்ளை வீட்டார்கள்! ஏன் தெரியுமா?
கர்நாடகா மாநிலம் ஹாசன் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரகுமார். அவர் அதே கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்பவரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது .
இந்நிலையில் ரகுமார் மற்றும் சங்கீதா ஜோடி திருமணம் நேற்று நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் பரபரப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வந்துள்ளது.இந்நிலையில் மாப்பிள்ளை வீட்டார் பெண்வீட்டார் எடுத்த சேலை தரமாக இல்லை எனவும், அதனை உடனே மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதனை பெண் வீட்டார்கள் ஏற்க மறுத்துள்ளனர்.இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் கோபம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார்கள் திருமணத்திற்கு முதல்நாள் மண்டபத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக பெண் வீட்டார்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.