திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பாஜக புள்ளியின் உறவினர் மரணம்; கண்ணீரில் குடும்பத்தினர்.!
வயல்வெளியில் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சோகம் ஹரியானாவில் நடந்துள்ளளது.
ஹரியானா மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிஜேந்திர் நெஹ்ரா. இவரின் மருமகன் உறவுமுறை கொண்ட இளைஞர் பிரசாந்த் (வயது 21). இவர் அங்குள்ள பல்லப்கர், சாகர்பூர் கிராமத்தில் வசித்து வருகிரர். வனப்பகுதியை ஒட்டியுள்ள இக்கிராமத்தில், விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களின் பயிர் பாதுகாப்புக்கு மின் கம்பிகளை விவசாய நிலத்தில் அமைத்து வைத்துள்ளனர் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "சில தேவதைகளுக்கு இறகுகள் இருப்பதில்லை, ஸ்டெதகோப் தான்" - 6 வயது சிறுவனின் உயிரை கைப்பற்றிய மருத்துவருக்கு குவியும் பாராட்டு.!
மின் கம்பியில் தவறி விழுந்து சோகம்
இந்நிலையில், சம்பவத்தன்று பிரசாந்த், தனது உறவினர் யாஷுடன் (வயது 18) இருசக்கர வாகனத்தில் வயல்வெளியில் இருக்கும் பால் பண்ணைக்கு பால் சேகரிக்க சென்றுள்ளார். இவர்கள் வயல்வெளிக்கு சென்றபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் இளைஞர்கள் யாஷ் மற்றும் பிரசாந்த் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சதுர் காவல்நிலைய அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்குப்பின் பிரசாந்தின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
குடும்பத்தினர் சோகம்
விவசாய குடும்பத்தை சேர்ந்த பிரசாத், டிப்ளோமா பயின்று இருக்கிறார். அவரின் குடும்பத்தை பிரசாத் கவனித்து வந்த நிலையில், தற்போது மரணம் ஏற்பட்டுள்ளது. 2 மகன்களில் ஒரு மகனை இழந்த பிரசாத்தின் தந்தை சந்திரபான் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். குடும்பத்தினர் அவரை ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர். அரசின் எச்சரிக்கையை மீறி மின்வேலி அமைத்து உயிர்பலிக்கு வித்திட்டுள்ளது.
இதையும் படிங்க: இரயில் பயணத்தில் சாகசம்; ஓடும் இரயிலில் இளைஞர் மின்சாரம் தாக்கி பலி.!