திருமணம் ஆகாத நபர்களுக்கு விரைவில் மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் - ஹரியானா முதல்வர் உறுதி.! கொண்டாட்டத்தில் சிங்கிள்ஸ்.!



Haryana CM Announce Govt develop No Marriage Persons 

 

அரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தில் நடந்த பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மனோகர் லால், மக்களின் குறைகளை முதலில் கேட்டறிந்தார். 

பின்னர் அவர் பேசுகையில், "திருமணம் ஆகாத 60 வயது நபர் தனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என புகார் அளித்து இருக்கிறார். மாநிலம் முழுவதும் 45 வயது முதல் 60 வயது வரை இருக்கும் திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். 

haryana

இதன் மூலமாக மாநிலத்தில் 1.25 லட்சம் பேர் பயனடைவார்கள்" என்று கூறினார். அம்மாநிலத்தில் மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓய்வூதியம் ஏற்கனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.