மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு மணிநேரத்திற்கு ரூ.700 தான்.. காவலருடன் பெண்ணை அனுப்பிய கும்பல்., அதிரடி காட்டிய அதிகாரிகள்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான முஸ்கான் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் ரகசிய கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். அச்சமயம் காவலர் ஒருவர் வாடிக்கையாளர் போல நிகழ்விடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அறையில் காத்திருக்க வைக்கப்பட்ட காவலரிடம் பேரம் பேசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாட்டுக்கறி விற்ற குடும்பத்தின் பெண்கள் பலாத்காரம்.! ஆண்கள் கொலை.. 4 பேர் அராஜகம்.!
பெண்ணை வைத்து விபச்சார தொழில் நடப்பது உறுதி
:
அதாவது ஒரு மணிநேரத்திற்கு ரூ.700 பணம் கொடுக்க ஒப்புக்கொண்டால், அவர் விரும்பும் பெண்ணை அனுப்பி வைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, பணம் செலுத்திய காவலருக்கு பெண் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தயாராக இருந்த காவல் துறையினர் விபச்சார கும்பலை அதிரடியாக கைதுசெய்தனர். இந்த கும்பல் உள்ளூர் முதல் வெளிநாட்டு நபர்களுக்கும் பெண்களை விலைக்கு அனுப்பி வைத்துள்ளது.நேபாளம், வங்கதேசம், அசாம், டெல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த மேலாளர் குமார், அவரின் உதவியாளர்கள் சோனு குமார், திக் விஜய், சந்தோஷ் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: ரூ.30 இலட்சம் பணத்திற்காக காதலி கொலை; யமுனை ஆற்றிலே தள்ளிவிட்டு பயங்கரம்.!