குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ரூ.5 ஆயிரம் பணம் கொடுக்க மறுத்த தாய் கொடூர கொலை: சூட்கேசில் உடலை அடைத்து ஆற்றில் வீசிய மகன்.!
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார் பகுதியை சேர்ந்தவர் ஹிமான்சு. இவர் தனது தாயார் ப்ரதிமா தேவியுடன் வசித்து வருகிறார்.
மதுபோதைக்கு அடிமையான ஹிமான்சு, தனது தாயாரிடம் ரூ.5 ஆயிரம் செலவுக்கு பணம் கேட்டதாக தெரியவருகிறது. தாயார் மகனுக்கு பணம் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த ஹிமான்சு அன்னையிடம் சண்டையிட்டுள்ளார்.
இந்த சண்டையில் ஆத்திரமடைந்த ஹிமான்சு, தனது தாயாரை கொலை செய்துள்ளார். பின் அவரின் உடலை சூட்கேசில் அடைத்து, உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயக்ராஜ் மாவட்டம், சங்கம் ஆற்றுக்கு தூக்கிவந்து வீசியுள்ளார்.
கிட்டத்தட்ட 890 கி.மீ தூரம் பயணம் மேற்கொண்டு உடல் வீசப்பட்டுள்ளது. இரயில் பயணத்தை ஹிமான்சு மேற்கொண்டு இருந்த நிலையில், எந்த விதமான சோதனையும் எங்கும் செய்யப்படவில்லை.
தேவியை காணாது சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து நடந்த விசாரணையை தொடர்ந்து மேற்கூறிய அதிர்ச்சி தகவல் அம்பலமானது.