96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஹிஜாப்பை எதிர்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஒற்றை முஸ்லீம் மாணவி.!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் ஒரு கல்லூரியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் இன்று வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மற்ற மாணவர்களுடன் உட்கார வைக்காமல் தனி அறையில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பியு கல்லூரியில் இந்துத்துவா மாணவர்களுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் இரண்டு இந்துத்துவா மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அங்கு இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பியுள்ளனர். ஆனால் அந்த மாணவி எதற்கும் அஞ்சாமல் அங்கிருந்து ஓடாமல் அவர்களை பார்த்து தனி ஆளாக நின்று சத்தமாக கோஷம் போட்டுள்ளார்.