காவேரி ஆற்றில் குளிக்க 21 வது நாளாக தொடர்ந்து தடை; ஒகேனக்கல்லில் நீர்வரத்து மீண்டும் உயர்வு.! 



hogenakkal Water Bathing Banned 

கர்நாடக மாநிலத்தின் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, காவேரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கே.ஆர்.எஸ் உட்பட காவேரி ஆற்றில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பியுள்ள காரணத்தால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தடை நீடிப்பு

இந்நிலையில், தொடர்ந்து 21 வது நாளாக ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்கவும், ஆறுகளில் நீராடவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவேரி ஆற்றுக்கு கர்நாடக பகுதிகளில் இருந்து நீர்வரத்து தொடருவதால், தடை அடுத்தடுத்து நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

இதையும் படிங்க: இளைஞர்களின் கையில் திடீரென வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்; பகீர் சம்பவம்.!

11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நேற்று வரை 75 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், இன்று மீண்டும் 85 ஆயிரம் கன அடி நீர் ஒகேனக்கலுக்கு வருகிறது. ஒகேனக்கல் வழியே மேட்டூர் அணைக்கு வரும் நீரானது, அப்படியே உபரி நீராக திறந்து விடப்படுகிறது. காவேரி கரையோரத்தில் இருக்கும் 11 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து தூக்கில் தொங்கிய காதல் ஜோடி.. பெற்றோர் திருமணத்திற்கு சம்மதித்தும் நேர்ந்த துயரம்.!