இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா.! அனைத்து விமானங்களையும் ரத்து செய்த நாடு.!



Hong Kong government announced cancellation of flights from india

இந்தியாவுடனான விமான போக்குவரத்தை மே 3ஆம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .

இந்தியாவில் கொரோனா சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது. இதனால் நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. 

flight

அதேபோல் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாட்டுடனான விமான சேவைகளையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, மும்பை - ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2 ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.