மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட கொடுமையே... சொந்த அண்ணனுடன் கள்ள உறவில் இருந்த மனைவி.!! கணவன் எடுத்த விபரீத முடிவு.!!
குஜராத் மாநிலத்தில் மனைவி, அவரது சொந்த சகோதரனுடன் பாலியல் உறவில் இருந்ததை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த நபரின் மனைவி, மனைவியின் சகோதரன் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்களை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டாவது திருமணம்
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள தோல்கா பகுதியில் 35 வயது நபர் வசித்து வந்தார். கடந்த 2009 ஆம் வருடம் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அந்த பெண்ணிடமிருந்து விவாகரத்து பெற்றார். இதனைத் தொடர்ந்து வேறொரு பெண்ணை இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த நபர் தனது தந்தையிடம் இருந்து விலகி வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
விஷம் குடித்து தற்கொலை
இந்நிலையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அந்த நபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தனது மகனின் தற்கொலை குறித்து அவரது தந்தை காவல்துறையிடம் பரபரப்பான புகாரை அளித்திருக்கிறார். அந்தப் புகாரில் மகனிடம் பேச்சு வார்த்தை இன்றி விலகி இருந்ததாக தெரிவித்த அவர், மகன் தற்கொலைக்கு முயன்றது குறித்து காவல்துறை தகவல் தெரிவித்ததாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மகனை பார்க்கச் சென்ற போது அவர் எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த கடிதம் குறித்து இறந்த நபரின் தந்தை கூறியிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: ஷாக்கிங்... அலுவலகத்தில் சடலமாக கிடந்த பிஜேபி நிர்வாகி.!! இளம் பெண்ணிடம் தீவிர விசாரணை.!!
புகாரில் வெளியான அதிர்ச்சி தகவல்
காவல்துறையிடம் தற்கொலை செய்து கொண்ட நபரின் தந்தை அளித்துள்ள புகாரில், தனது மகனின் இரண்டாவது மனைவிக்கு அவரது சொந்த சகோதரனுடன் பாலியல் உறவு இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தெரிந்து கொண்ட தனது மகன், மனைவி மற்றும் மனைவியின் சகோதரரை கண்டித்திருக்கிறார். எனினும் அவர்கள் இதை பொருட்படுத்தாது தனது மகனை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவமானம் தாங்க முடியாமல் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். மேலும் தனது மகனின் இரண்டாவது மனைவிக்கு பலமுறை திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகியிருக்கிறது. இவை அனைத்திற்கும் அந்தப் பெண்ணிற்கு அவரது சகோதரனுடன் இருந்த கள்ளக்காதல் தான் காரணம் எனவும் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட நபரின் மனைவி, மனைவியின் சகோதரன் மற்றும் 3 குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நண்பனை நம்பிச் சென்றபோது நடந்த பயங்கரம்.!