96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தனது நெருங்கிய நண்பர்களோடு நெருக்கமாக இரு.! கட்டிய மனைவியை கொடுமை படுத்திய கணவன்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷாகர் என்பவருக்கு பல வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர் திருமணத்திற்கு முன்பு தான் ஒரு எம்பிஏ பட்டதாரி என்றும் சுயமாக ஜவுளி நடத்தி வருவதாகவும் கூறி, வரதட்சணை வாங்கி திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் பெண் வீட்டில் வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஷாகர் ஒரு எம்பிஏ பட்டதாரி இல்லை என்றும் வரதட்சிணையாக கொடுத்த நகை மற்றும் பணத்தை கொண்டு தொழில் தொடங்கி அதில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதையும் அவரது மனைவி கண்டுபிடித்துள்ளார். ஷாகர் தினமும் குடி, சூது என்று போதை பழக்கத்திற்கு அடிமையாகி பணத்தை செல்வழித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷாகரின் மனைவி தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் மனைவியை சாகர், அடித்து உதைத்ததோடு, தனது நெருங்கிய நண்பர்களோடு நெருக்கமாக இருக்கும் படியும், அதனால், தானும் நண்பர்களின் மனைவிகளோடு நெருக்கமாக இருக்க முடியும் என வற்புறுத்தியுள்ளார். அதற்க்கு மறுப்பு தெரிவித்ததால், மனைவியை வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் ஷாகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ஷாகரின் மனைவி. அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஷாகர் ஏற்கெனவே அமெரிக்காவுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது. இந்நிலையில், ஷாகரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.