மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
5 பேர் கும்பலால் 13 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீட்டில் அடைத்து வைத்து கொடுமை.!
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள டபொரிஜு பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 30 வயது நபர், கடந்த ஜூலை 28ம் தேதி கடத்தி இருக்கிறார்.
கடத்தப்பட்ட சிறுமியை 5 நாட்களாக தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன், தனது நண்பர்களையும் அத்துமீற அனுமதித்து இருக்கிறான்.
கூட்டுப்பாலியல் பலாத்காரம்
மொத்தமாக 5 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி, பின் மிரட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவர்களின் மிரட்டலுக்கு பயந்துபோன சிறுமி காவல் நிலையத்திலும் முதலில் புகார் அளிக்க முன்வரவில்லை.
இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் 7 பேரின் உயிரை பறித்த எமன்; அப்பளம் போல நொறுங்கிய ஆட்டோ.!
பின் பெற்றோரிடம் உண்மையை கதறியபடி விவரிக்க, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஐவர் கும்பல் போக்ஸோவில் கைது
சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் பாளி காஜி, தபாங் பரிங், ராஜு லாம்டாக், ஜெபு லேயா, நனேஷ் நயம் ஆகிய 5 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுவனின் உயிரைப்பறித்த ரசகுல்லா; படுத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கமுடையோர் உஷார்.!