மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பா அம்மாவை கூட்டிட்டு வாப்பா... போதையில் மகனை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற தகப்பன்.!
குடிபோதையில் தந்தை - மகன் வாக்குவாதம் செய்து உறங்கிய நிலையில், ஆத்திரம் தீராத தகப்பன் மகனை உறக்கத்திலேயே கோடரியால் கூறுபோட்டு கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், மோச்சேரி குளக்கரை பகுதியில் வசித்து வருபவர் கோபால் (வயது 65). இவர் கூலித் தொழிலாளி ஆவார். கோபாலின் மனைவி சரஸ்வதி. இவரது முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், கோபாலை இரண்டாவதாக சரஸ்வதி திருமணம் செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: செங்கல்பட்டு: திருமணமான 2 ஆண்டுகளில் இப்படியா நடக்கணும்?.. தவிக்கும் மனைவி, 6 மாத கைக்குழந்தை..!
சரஸ்வதிக்கு முதல் கணவரின் வாயிலாக பார்த்தீபன் (வயது 35) என்ற மகன் இருக்கிறார். இவர் சோத்துப்பாக்கம் பகுதியில் இருக்கும் லாரி ஷெட்டில் வேலை பார்த்து வருகிறார். கோபால் - சரஸ்வதி தம்பதி ஒன்றாக வசித்து வந்துள்ளது.
தந்தை - மகன் தகராறு
கோபால் - பார்த்தீபன் மதுப்பழக்கம் கொண்டவர்கள் இனத்தால், அவ்வப்போது இருவரும் போதையில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்களை சரஸ்வதி சமாதானம் செய்து வந்துள்ளார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்னதாக கோபால் - சரஸ்வதி இடையே தகராறு உண்டாகி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் கோபமடைந்த சரஸ்வதி இச்சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை வீட்டிற்கு அழைத்து வருவதில் தந்தை - மகன் இடையே தகராறு நிலவி இருக்கிறது. நேற்று இரவிலும் இருவரும் போதையில் இருந்துள்ளனர். அப்போது மீண்டும் சரஸ்வதியை அழைத்து வருவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
மகனை கொன்ற தந்தை
ஒருகட்டத்தில் கோபால் பார்த்தீபனை தாக்கி இருக்கிறார். ஆத்திரத்தில் சாப்பிடாமலும் இருவரும் உறங்கியுள்ளனர். பின் அதிகாலை 3 மணியளவில் எழுந்த கோபால், மகனின் மீது ஆத்திரம் குறையாமல் கோடரியை எடுத்து வந்து, உறக்கத்தில் இருந்த பார்த்தீபனை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இதில் தலை, கழுத்து, மார்பு பகுதியில் படுகாயம் அடைந்த பார்த்தீபன் பரிதாபமாக உயிரிழந்தார். மகனை கொலை செய்த கோபால் தலைமறைவான நிலையில், காலையிலேயே அக்கம் பக்கத்தினருக்கு விபரம் தெரியவந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பார்த்தீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான கோபாலை தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: #Breaking: நாளை பொளந்துகட்டப்போகும் மழை; 4 மாவட்டங்களில் விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!