திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒருசில நொடிகள் தான்.. ஜிம்மில் தொழிலதிபர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!
இந்தியாவில் இளவயது மாரடைப்பு மரணங்கள் சமீபகாலமாகவே அதிகரித்து இருக்கிறது. 10 வயது குழந்தை முதல் 30 - 40 வயதுக்குள் இருக்கும் நபர்களின் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிர்ச்சியை தரும் வகையில் அமைந்துள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கிவால்ஜீத் சிங். இவர் தொழிலதிபர் ஆவார். கடந்த 20 ம் தேதி தனது நண்பர்களுடன் உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்தார்.
மயங்கி சரிந்து பரிதாப மரணம்
அச்சமயம் திடீரென அவர் மயங்கி சரிந்த நிலையில், அவரை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், சிங் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: வேலை பார்த்தபடி நொடியில் பறிபோன உயிர்; வங்கி மேலாளருக்கு நடந்த சோகம்..! கேமிராவில் பதிவான காட்சிகள்.!
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிவால்ஜீத் சிங் மரணமடைந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் ஜிம்மில் இருந்த கேமிராவில் பதிவாகி இருக்கின்றன. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Another death due to heart attack⚠️
— Sneha Mordani (@snehamordani) July 22, 2024
Businessman Kawaljeet Singh collapses after suffering a fatal heart attack while working out at a gym in Maharashtra's Chhatrapati Sambhajinagar. pic.twitter.com/LXMne0qElz
இதையும் படிங்க: மழைநேரங்களில் கவனம்.. தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி.!