திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிவேகத்தில் காரை இயக்கிய 19 வயது இளைஞர்; விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய கார்.. பரிதாப பலி.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாவட்டம், மெஹடிபட்டணம் பகுதியில் வசித்து வருபவர் சரண் (வயது 19). இவர் ஐசிஎப்ஏஐ பல்கலைக்கழகத்தில் பிபிஏ துறையில் பயின்று வருகிறார்.
இவர் சம்பவத்தன்று தனது ஸ்விப்ட் டிசைர் (Swift Dzire) காரில் பிஎன்ஆர் ஹில்ஸ் பகுதியில் இருந்து வீட்டிற்கு பயணம் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம், அங்குள்ள ராய்துர்க்கம் பகுதியில் உள்ள பாலத்தில் வந்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்து பறந்த கார்
அதிவேகத்தில் இவர் வந்ததாக தெரியவரும் நிலையில், பாலத்தின் மீது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாலத்தில் இருந்து பறந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.
இதையும் படிங்க: அடேங்கப்பா... ரூ.19.51 இலட்சம் கொடுத்து பேன்சி நம்பர் பிளேட் வாங்கிய நபர்; ரொம்ப ராசியான நம்பர் போல.!
இந்த சம்பவத்தில் அப்பளம் போல நொறுங்கிய வாகனத்தில் பயணம் செய்த சரண், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து ராய்துர்க்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
BBA student died, after the Speeding car he was driving, rammed into the flyover in #Hyderabad
— Surya Reddy (@jsuryareddy) August 2, 2024
A 19-year-old Charan is the BBA student of ICFAI University. He was returning from BNR hills to his house at Mehdipatnam, on his Swift Dzire car. Lost control over the #Speeding car… pic.twitter.com/rL5RloTXBI
இதையும் படிங்க: பூரி பிரியர்களா நீங்கள்? நெளிந்த புழுவால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.!