ஆசையாக கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் பரிதாப பலி; டெலிவரி ஊழியர், மனைவி உயிர் ஊசல்.!



in Karnataka Bangalore 5 Year Old Boy Dies after Taking Cake after Dinner 

இரவு நேரத்தில் வாடிக்கையாளர் ஆர்டர் செய்து கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட குடும்பத்தில் சிறுவன் உயிரிழக்க, பெற்றோர் உயிருக்கு போராடுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், புவனேஸ்வரி நகரில்  வசித்து வருபவர் பாலராஜ். இவர் ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பாலராஜின் மனைவி நாகலட்சுமி. தம்பதிகளுக்கு தீரஜ் குமார் என்ற 5 வயது மகன் இருக்கிறார். 

சம்பவத்தன்று உணவு டெலிவரி செய்யச் சென்ற பாலராஜ், வாடிக்கையாளர் ஆர்டர் செய்து கேன்சல் செய்திருந்த கேக்கை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அங்கு தம்பதிகள், தங்களின் மகனுடன் சேர்த்து கேக்கை சாப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: "படியில் நிற்காதே" - அறிவுரை கூறிய நடத்துனருக்கு கத்திக்குத்து.. பேருந்தில் அதிர்ச்சி.. பதறியோடிய பயணிகள்.!

cake

Cake | File Pic

அடுத்தடுத்து உடல்நலக்குறைவு

கேக்கை சாப்பிட்ட சில மணிநேரத்தில் மூவருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதியான சிறுவன் உயிரிழந்தார். அவரின் பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விஷயம் தொடர்பாக பரப்பன அஹ்ரகாரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் உணவில் விஷம் கலக்கப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கேக் உணவு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்க போலி ரைடு; அரசுப்பணியாளர்களின் திருட்டு சேட்டை அம்பலம்.. நால்வர் கைது.!