மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயோ.. அம்மா.... மாமூல் தர மறுத்தால் கடை உரிமையாளரை சோடா பாட்டிலால் தாக்கிய போதை கும்பல்.!
மதுபோதை கும்பல் பெட்டிக்கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் மளிகைக்கடை ஒன்றுக்கு, நேற்று இரவில் போதையில் கும்பல் ஒன்று வந்துள்ளது. அவர்கள் கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு தகராறு செய்ததாக தெரியவருகிறது.
கடை உரிமையாளர் மாமூல் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த கும்பல் அங்கிருந்த சோடா பாட்டிலை எடுத்து சரமாரியாக உரிமையாளரை கடுமையாக தாக்கியது. மேலும், கடையில் இருக்கும் பிற பொருட்களையும் தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்டது.
இதையும் படிங்க: அக்கா எனக்கு ஏதும் வாங்கித்தாயேன்.. பெண்ணிடம் உணவு கேட்ட நாய்.. நெஞ்சை நெகிழவைக்கும் காணொளி.!
உரிமையாளர் கதறல்:
இதனால் வலி பொறுக்க இயலாமல் ஐயோ, அம்மா என உரிமையாளர் கதறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்துவிடுவார்கள் என உணர்ந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தது.
இந்த விஷயம் குறித்த சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடையின் உரிமையாளர் அலறும் பதைபதைப்பு காட்சிகள்
மாமூல் கேட்டு தர மறுத்த ஊழியர்... சோடா பாட்டிலில் அடி.. வலி தாங்க முடியாமல் துடிதுடிக்கும் அதிர்ச்சி காட்சி!#Puducherry #Rowdys #Police #CCTV #Attack #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/VRyeLaRURM
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 17, 2024
வீடியோ நன்றிநியூஸ் தமிழ் 24 X 7
இதையும் படிங்க: #JustIN: மீண்டும் பயங்கரம்.. பயணிகள் இரயில் தடம்புரண்டு விபத்து.. காத்திருந்த அதிஷ்டம்.!