குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பாட்னாவுக்கு ரயிலில் வந்த மர்ம பெட்டியில்; மடித்து வைக்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம்...!!
பாட்னாவுக்கு வந்த ரெயிலில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் அடைக்கப்பட்ட பெட்டி கிடந்தது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பாட்னா இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் டானாபூர் பிரிவில் இருக்கும் பாட்னா ரெயில் நிலையத்தில் நின்றது. அந்த ரயிலின் பொதுப் பெட்டியில் இரும்பு பெட்டி ஒன்று இருந்தது.
தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர், அந்த இரும்பு பெட்டியை கைப்பற்றி விசாரனை செய்தனர். அந்த பெட்டி யாருடையது என்று தெரியாத நிலையில், காவல்துறையினர் பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் ஒரு இளைஞரின் உடல் இருந்தது.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அந்த உடலை உடற்கராய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ரெயில்வே எஸ்பி தாக்குர் கூறுகையில், ஜிஆர்பி பிளாட்பாரம் 72 ஐ ரயில் அடைந்த போது, அங்கிருந்த இரும்பு பெட்டியின் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.
அந்தப் பெட்டி மிகவும் கனமாக இருந்ததால், அதன் பூட்டை உடைத்து பார்த்தோம். அப்போது அந்த பெட்டிக்குள் 25 வயது இளைஞரின் இறந்த உடல் பெட்டிக்குள் மடக்கி வைக்கப்பட்டிருந்தது.
சடலத்தின் கழுத்தில் கயிறு இருந்தது. எனவே கயிறால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது என்றார்.