மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமண நாள் நடனத்தில் சோகம்.. மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் பரிதாப பலி., நெஞ்சை உலுக்கும் இறுதி காட்சிகள்.!
22 வயது மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு திருமண விழாவில் மரணடைந்த சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம், போஜ்புர் கிராமத்தில் வசித்து வருபவர் சிவம் (வயது 22). இவருக்கும், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள டேகி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு இன்று மணமகன் இல்லத்தில் நடனமாடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, மணமகன் முன்னிலையில் குடும்பத்தினர் பலரும் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடிக் கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: கணவனை கொன்று கொளுந்தனுடன் குடித்தனம்; கள்ளக்காதல் ஜோடியின் விபரீத செயல்.. 6 மாதங்கள் கழித்து சிக்கியது எப்படி?
மணமகன் மயங்கிச் சரிந்து மாரடைப்பால் பலி
இதனிடையே, திடீரென மணமகன் இருக்கையில் அமர்ந்தவாறு மயங்கிச் சரிந்தார். பதறிப்போன குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இதனால் மணமகனின் குடும்பமே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மரணத்திற்கு முன்னர் மணமகன் சிவம் நடனமாடி, பின் பாரம்பரிய அரிசி நிகழ்ச்சிக்காக இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போதுதான் இந்த சோகம் நடந்துள்ளது.
மறைந்த சிவம் தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக இருந்து வருகிறார். இவரின் தந்தை சாஹேப் சிங், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்ட நிலையில், தாய் துரோபா தேவியுடன் சிவம் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரசித் (18), சூரஜ் (12) என்ற சகோதரர்களும் இருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக குடும்பத்தை தூணாக தாங்கியவர், எவ்வித உடலநலக்குறைவும் இன்றி இருந்து வந்த நிலையில், அவரின் மரணம் ஏற்பட்டது.
हाथरस, यूपी में शादी के दिन दूल्हे शिवम की मौत हो गई। डांस के बाद वो भात कार्यक्रम में जाकर बैठा और वहीं जमीन पर गिर पड़ा। डॉक्टर इसे साइलेंट अटैक मान रहे हैं।@madanjournalist pic.twitter.com/u8gsUKZobM
— Sachin Gupta (@SachinGuptaUP) November 18, 2024
இதையும் படிங்க: மின்கட்டணத்தை குறைப்பதாக இளம்பெண் பலாத்காரம்; மின்வாரிய துணைநிலை பொறியாளரின் அதிர்ச்சி செயல்.!