மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனை கொன்று கொளுந்தனுடன் குடித்தனம்; கள்ளக்காதல் ஜோடியின் விபரீத செயல்.. 6 மாதங்கள் கழித்து சிக்கியது எப்படி?
கணவரின் தம்பியுடன் கள்ளக்காதல் வயப்பட்ட பெண்மணி, கொலை சம்பவத்தை அரங்கேற்றி 6 மாதங்கள் கழித்து கைது செய்யப்பட்டார்.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், லக்கிம்பூர் கேரி பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் அஸ்வதி (வயது 45). இவரின் மனைவி பூனம். தம்பதிகள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் ஆவார்கள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்
இதையும் படிங்க: மின்கட்டணத்தை குறைப்பதாக இளம்பெண் பலாத்காரம்; மின்வாரிய துணைநிலை பொறியாளரின் அதிர்ச்சி செயல்.!
கள்ளக்காதல்
இதனிடையே, தினேஷின் சகோதரர் மனோஜ் கடந்த 2 ஆண்டுகளாக சொந்த ஊரில் அண்ணன் - அண்ணியின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மனோஜின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, பூனம் அவருடன் காதல் வயப்பட்டு, இருவரும் கள்ளக்காதல் ஜோடிகளாக வலம் வந்துள்ளனர்.
பல நேரங்களில் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இவர்களின் கழகத்தால் விவகாரம் தினேஷுக்கு தெரியவந்து இருவரையும் கண்டித்து இருக்கிறார். இதனால் தினேஷை திட்டமிட்டு கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி, கை-கால்களை வெட்டி உடலை குளத்தில் வீசியுள்ளது.
கணவர் கொலை
கடந்த ஏப்ரல் 27ல் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், இருவரும் கொலைக்கு பின்னர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாகேஸ்வர் தாமுக்கு சென்று தங்கிவிட்டனர். அங்கு இருவரும் வழக்கில் இருந்து தப்பிக்க அடையாளத்தை மறைத்து தொண்டுப்பணிகளை செய்து வந்துள்ளனர்.
குளத்தில் இருந்து தினேஷின் சடலம் மீட்கப்பட்டு, உள்ளூர் மக்களின் தகவலின்பேரில் கள்ளக்காதல் ஜோடியை காவல்துறையினர் பல இடங்களில் தேடி வந்தனர். இறுதியாக கிட்டத்தட்ட 6 மாதங்கள் கழித்து இவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: நீட் பயிற்சி வழங்குவதாக சிறுமி 6 மாத காலம் பலாத்காரம்.. 2 ஆசிரியரிகளின் பதறவைக்கும் செயல்.!